January 6, 2020

பெருமை


பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளியயாருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.           971

ஒருவனுக்குப் பெருமையாவது பிறரால் செய்தற்கரிய செயலைச் செய்வோம் என்று கருதும் ஊக்க மிகுதி. ஒருவனுக்குச் சிறுமையாவது அவ்வூக்கத்தை ஒழித்து வாழ்வோம் என்று எண்ணுதல்.

பிறப்புஓக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.      972

எல்லா மக்களுக்கும் பிறப்பு ஒக்கும். அவரவர்கள் செய்யும் தொழில் வேற்றுமையால் பெருமை சிறுமை என்னும் சிறப்பு ஒவ்வா. 

மேல்இருந்தும் மேலல்லார் மேல்அல்லலர் கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழல் லவர்          973

சிறியோர் மேலான இடத்திலிருந்தாலும் பெரியோராகார். பெரியோர் கீழான இடத்திலிருந்தாலும் சிறியோராகார். 

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.          974

ஒருமனப் பெண்டிர் தம்மைத் தாம் காத்துக் கொள்ளுதல் போல, பெருமையும், ஒருவன் தன்னைத் தான் காத்துக் கொண்டு நடப் பானாயின் அவனிடம் உள்ளதாகும்.  

பெருமை உடையவர் ஆற்றுவர் ஆற்றின்
அருமை உடைய செயல்.         975

பெருமை உடையவர், செய்தற்கு அரிய செயல்களை அவற்றிற் குரிய வழியிலே செய்ய வல்லவர் ஆவர். 

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.      976

பெரியாரைப் போற்றி, அவரைத் துணையாகக் கொள்வோம் என்னும் கருத்து, சிறியவர்களது உணர்வின் கண் இல்லை. 

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின்.   977

சிறப்பானது, சிறியோரிடம் உண்டாகுமாயின், செருக்கி னால் அளவு கடந்து போகும் செயலை உடையவராக்கி விடும். 
 
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.         978

பெரியோர் எப்போதும் அடங்கி நடப்பர். சிறியோர் தம்மைத் தாமே புகழ்ந்து பெருமைப்படுத்திக் கொள்வர்.  

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.      979

பெருமையாவது செருக்கில்லாதிருத்தல், சிறுமையாவது செருக்கின்  முடிவில் நின்று விடுதல். செருக்கின் முடிவு:அளவு கடந்து செருக்குக் கொள்ளுதல். 

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.    980

பெரியோர் பிறரது குற்றத்தை மறைத்துச் சொல்லுவர். சிறியோர் பிறரது குற்றங்களையே கூறி விடுவர். 

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...