கண்ணோட்டம்
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு. 571
கண்ணோட்டம் என்னும் மிகவும் பெரிய அழகு உண்டாயிருத்தலால்,
இவ்வுலகம் நிலைபெற்றிருக்கிறது. அஃதில்லையேல் உலகு கெடும் என்பதாகும்.
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃதிலார்
உண்மை நிலக்குப் பொறை. 572
உலகநடை கண்ணோட்டத்தினால் நடைபெறுகிறது. அக்கண் ணோட்டம் இல்லாதவர் இருப்பது நிலத்திற்குச் சுமையாகும்.
பண்என்னாம் பாடற்கு இயைபுஇன்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 573
இசையானது பாட்டோடு பொருந்தாவிட்டால் என்ன பயனு டையதாகும்? அதுபோல, கண்ணானது கண்ணோட்டம் இல்லாத விடத்து என்ன பயனுடைதாகும்?
உளபோல் முகத்துஎ வன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 574
அளவைக் கடவாத கண்ணோடுதலை யுடையதல்லாத கண்கள், முகத்தில் உள்ளன போல் தோன்றுவதன்றி வேறு என்ன பயன் செய்யும்?
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதுஇன்றேல்
புண்என்று உணரப்படும். 575
ஒருவனது கண்ணுக்கு அணியும் அணிகலமாவது கண் ணோட்ட மாகும். அவ்வணிகலம் இல்லாவிட்டால் புண் என்று அறியப்படும்.
மண்ணோடு இயைந்த மரத்துஅனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர். 576
கண்ணிருந்தும் கண்ணோடாதவர், மண்ணோடு பொருந்தி யிருக்கும் மரத்திற்கு ஒப்பாவார். கண்ணோடாதவர் மரத்திற் கொப்பாவர்.
கண்ணோட்டம் இல்லவ் கண்ணலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 577
கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணில்லாதவரே யாவர். கண்ணுடையவர் கண்ணோட்டம் இல்லாதவராதல் இல்லை. கண்ணுடையவர் கண்ணோட வேண்டும் என்பதாம்.
ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை. 578
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்தும் கண்ணோட்டம் செய்து அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே முதன்மையானது.
ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை. 579
தம்மை வருத்தும் இயல்புடையவரிடத்தும், கண்ணோட்டம் செய்து அவர் செய்த குற்றத்தைப் பொறுத்துக் கொள்ளும் தன்மையே முதன்மையானது.
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 580
No comments:
Post a Comment