January 6, 2020

சூது


சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.         931

தனக்கு வெல்லும் ஆற்றல் இருப்பினும் சூதாடுதலை விரும்பற்க. சூதில் வென்ற பொருளும் இரையால் மூடப்பட்ட தூண்டிலிரும்பினை மீன் விழுங்கினாற் போலும்.

ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றுஎய்தி வாழ்வதார் ஆறு.            932

முதலில் ஒரு பொருளை அடைந்து பிறகு மென்மேலும் வெல்லு வோம் என்ற எண்ணத்தினால் நூறு பொருள்களை இழக்கம் சூதாடி களுக்கும், நன்மையடைந்து வாழ்வதொரு வழி உண்டோ? இல்லை.

உருள்ஆயம் ஓவாது கூறின் பொருள்ஆயம்
போஒய்ப் புறமே படும். 933

ஒருவன் உருளுங் கவற்றிற் சூரிய பணையத்தை இடைவிடாமல் கூறிச் சூதாடுவானாயன், பொருளும், பொருள் வருவாயும் அவனை விட்டுப் போய்ப் பிறரிடம் சேரும். 

சிறுமை பலசெய்து சீர்அழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல். 934

துன்பங்கள் பல உண்டாக்கி, உள்ள புகழையுங் கெடுக்கும் சூது போல, ஒருவனுக்கு வறுமையைத் தர வல்லது வேறொன்றில்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.      935

சூதையும், சூதாடுமிடத்தையும், கவறாடும் கைத்தொழிலை யையும் விரும்பி, விடாதவர் வறியராயினார். 

அகடுஆரார் அல்லல் உழப்பர்சூது என்னும்
முகடியான் மூப்பட் டார்.          936

சூது என்னும் மூதேவியால் மறைக்கப்பட்டவர், வயிறு நிறைய உண்ணப் பெறார். துன்பத்திலும் உழலுவார்.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகன்.          937

ஒருவனது செல்வத்தைக் கெடுத்து, பொய்யை மேற் கொள்ளச் செய்து, அருளைக் கெடுத்து, அவனைத் துன்பத்தில் உழல வைக்கும்.

பொருள்கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.     938

ஒருவனது செல்வத்தைக் கெடுத்து, பொய்யை மேற் கொள்ளச் செய்து, அருளைக் கெடுத்து, அவனைத் துன்பத்தில் உழல வைக்கும்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.       939

ஒருவன் சூதாட்டத்தை விரும்புவானாயின், புகழும் கல்வியும் செல்வமும் உணவும் உடையும் என்று சொல்லப்பட்ட ஐந்தும் அவனைச் சேராவாம்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.       940

பொருளை இழக்குந் தோறும் அதை விரும்பும் சூதாட்டத்தைப் போல துன்பப்படுந்தோறும் இன்பத்தை விரும்புவது உயிர்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...