January 6, 2020

கல்வி


கல்வி

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.         391

ஒருவன் கற்க வேண்டியவற்றைக் குற்றமறக் கற்க வேண்டும். அவ்வாறு கற்றபின் அக்கல்விக்குத் தகுதியாக நடக்க வேண்டும்.

எண்என்ப ஏனை எழுத்துதென்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.  392

எண்ணென்று சொல்வனவும் மற்றை எழுத்து என்று சொல் வனவும் ஆகிய இவ்விரண்டும், மக்களுக்குக் கண்ணென்று சொல்லு வர் அறிவுடையோர்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393

கண்ணுடையர் என்று உயர்த்துச் சொல்லப்படுவர் கற்றவரே. கல்லாதவர் முகத்தில் இரண்டு புண்களை உடையவராவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புவவர் தொழில். 394

யாவரும் மிகழும்படி கூடி, இனி என்று இவரைக் கூடுவோம் என்று அவர்கள் நினைக்கும்படி நீங்குதலாகிய அத்தன்மையதே கற்றோரது செய்கை. 

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்.           395

செல்வர் முன் வறியர் விரும்பி நிற்பது போல ஆரியரிடம் விரும்பி நின்றும் கற்றவரே உயர்ந்தவராவர். அவ்வாறு கல்லாதவர் தாழ்ந்த வராவர்.

தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.   396

ஊற்று தோண்டிய அளவு நீர் சுரக்கும். அது போல, மக்கட்குக் கற்ற அளவு அறிவு உண்டாகும்.

யாதானும் நாடுஆமால் ஊர்ஆமால் என்ஒருவன்
சாந்துணையும் கல்லாத வாறு.        397

கற்றவனுக்கு எந்த நாடும் நன்னாடாகும். எந்த ஊரும் தன்னூ ராகும். ஆகையால், ஒருவன் சாகும்வரையில் கல்லாமல் இருப்பது என் கருதி? கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. ஆல்- ஆசை.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.         398

ஒருவனுக்கு ஓரிடத்தில், தான் கற்ற கல்வியானது, பலவிடங் களிலும் சென்று உதவுதலைடைத்து.

தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.         399

தாம் இன்புறும் கல்வியால் உலகத்தார் இன்புறுதலைக் கண்டு, கற்றறிந்தவர்கள் மேலும் மேலும் கற்க விரும்புவர்.

கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.     400

ஒருவனுக்கு அழிவற்ற சிறந்த செல்வமானது கல்வி. மற்றவை யயல்லாம் பொருளல்ல. கல்வியே சிறந்த பொருளாகும்.

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...