மடியின்மை
குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும். 601
தான் பிறந்த குடியாகிய அணையா விளக்கு, ஒருவனது சோம்ப லாகிய இருள் அடர அணைந்து போகும்.
மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். 602
தாம் பிறந்த குடியை மேன்மேல் உயருங்குடியாக விரும்புவர், சோம்பலைச் சோம்பலாகவே கொண்டு முயற்சியுடன் நடப்பாராக.
மடிமடிக் கெண்டொழுகும் பேதைப் பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. 603
விலக்கத்தக்க சோம்பலைத் தன்னுள்ளே கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடியானது, அவனுக்கு முன்பே மடிந்து விடும்.
குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றுஇ லவர்க்கு. 604
சோம்பலின் கண்ணே வீழ்ந்ததால் சிறந்த முயற்சி இல்லாதர்க்கு குடியும் அழிந்து குற்றமும் பெருகும்.
நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். 605
சோம்பலும் தாழ்த்தலும் மறதியும் தூக்கமும் ஆகிய நான்கும், அழியும் இயல்பினையுடையோர்
விரும்பியேறும் கப்பலாகும்.
படிஉடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. 606
நிலத்தை ஆள்பவரது செல்வம் தம்மை அடைந்த போதும், சோம்பலுடையவர் அச் செல்வத்தால் சிறந்த பயனை அடைதல் இல்லை.
இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றுஇ லவர். 607
சோம்பலை விரும்புவதால் சிறந்த முயற்சி இல்லாதவர், தமது நண்பர்களால் இடித்துரைத்தும் பயன்படாமையால் பின் இகழ்ந்து ரைக்கும் சொல்லைக் கேட்பர்.
மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். 608
சோம்பலானது குடி செய்வானிடம் தங்குமாயின், அது அவனைத் தம் பகைவர்க்கு அடிமையாக்கி விடும்.
குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். 609
ஒருவன் சோம்பலை ஒழித்து விடின், அவன் குடியை யாளும் தன்மையில் வந்த குற்றங்கள் பலவும் நீங்கும்.
மடிஇலா மன்னவன் எய்தும் மடிஅளந்தான்று
ஆஅயது எல்லாம் ஒருங்கு. 610
No comments:
Post a Comment