January 3, 2020

நாணுத் துறவு உரைத்தல்


நாணுத் துறவு உரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடல்அல்லது இல்லை வலி.            1131

இன்பம் நுகர்ந்து பின் அது பெறாமல் மருந்தினவர்க்கு, காப்பாகிய மடல்மாவைத் தவிர வலியாவது வேறு இல்லை. ஆகவே, நானும் அது செய்வேன் என்பதாம்.    

நோனா உடம்பு உயிரும் மடல்ஏறும்
நாணனை நீக்கி நிறுத்து.         1132

மடலேறுவதை விலக்கவதாகிய நாணத்தை நீக்கி நிறுத்திவிட்டு, முன் நுகர்ந்த இன்பத்தைப் பெறாததால் உண்டான வருத்தத்தைப் பெறாத உடம்பும் உயிரும் மடலின் மாவின் மீது ஏறக் கருதுகின்றன. 
  
நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல்.           1133

நாணமும் மிகுந்த ஆண்மையும் முன்பு உடையவனா யிருந்தேன். இப்போது காமமிகுந்தவர் ஏறும் மடலை உடையவனா யிருக்கிறேன்.  
  
காமக் கடும்புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை.        1134

நாணம், மிகுந்த ஆண்மை என்னும் புணைகளை, காமமாகிய பெரிய வெள்ளம் என்னை விட்டுப் பிரித்துக் கொண்டு போகின்றது.   

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.            1135

மாலை போலத் தொடரும் சிறிய வளையல்களை உடையாள், மாலைப் பொழுதில் உறும் துன்பத்தையும், மடன்மாவையும் இப்போது எனக்குத் தந்தான். முன் இவற்றை அறியேன்.   

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்குஎன் கண்.   1136

நின் பேதையை நினைத்து என் கண்கள் தூங்குவதைப் பொருந்தா. ஆகையால் எல்லோரும் உறங்கும் நடு இரவிலும் நான் தூங்காதிருந்து மடலூர் தலையே நினைப்பேன்.    

கடல்அன்ன காமம் உழந்தும் மடல்ஏறாப்
பெண்ணிற் பெருந்தக்கது இல்.         1137

கடலைப் போன்ற மிகுந்த காமத்தால் வருந்தியும், மடலேறாமல் பொறுத்திருக்கும் பெண் பிறப்பைக் காட்டிலும், மிகுந்த தகுதியையுடைய பிறப்பு வேறு இல்லை.  

நிறைஅரியர் மன்அளயர் என்னாது காமம்
çஇறந்து மன்று படும். 1138

இவர் நிறை இல்லாதவர், என்றெண்ணிப் பாராது, மகளிர் காமும் அவர் மறைத்தலைக் கடந்து மன்றின் கண்ணே வெளிப்படுவ தாயிற்று.   

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு.     1139

என்னை யயாழிந்த யாரும் தன்னை அறியவில்லை என்று நினைத்து, என் காமமானது இவ்வூர்த் தெருக்களில் மயங்கித் திரிகின்றது. 
  
யாம்கண்ணிற் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா வாறு.       1140

யாம் உற்ற நோய்களைத் தாம் உறாமையால், அறிவில்லா தவர்கள் யாம் கண்ணால் காணுமாறு என்னைக் கண்டு சிரிக்கின்றனர்.   

No comments:

Post a Comment

1949 இல் புலவர் குழந்தை அவர்கள் எழுதிய முகவுரை

முகவுரை தமிழர் பண்பாட்டுக்குச் சான்றாக உள்ள பழந்தமிழ் நூல்களுள் திருக்குறளே தலையாய நூலாகும் . திருக்குறள் திருவள்ளுவர் என்ன...