பகைத்திறம் தெரிதல்
பகையயன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற் றன்று.
871
பகையயன்று சொல்லப்படும் குணமில்லாததை, ஒருவன் விளையாட்டின் கண்ணும் விரும்பற்பால தன்று.
வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லே ருழவர் பகை. 872
ஒருவன் வில்லை ஏராக உடைய உழவரது பகையை கொள்ளினும், சொல்லை ஏராக உடைய உழவரது பகையைக் கொள்ளற்க.
ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். 873
தனியனாய்ப் பலரோடு பகை கொள்பவன், பித்தரைக் காட்டிலும் அறிவில்லாதவனாவான்.
பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற் றுலகு. 874
வேண்டிய போது பகையை நட்பாகச் செய்து கொண்டு வாழும் இயல்புடையவனது பெருமையினிடத்து இவ்வுலகம் அடங்கிற்று.
தன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்
இன்றுணையாக் கொள்கவற்றின் ஒன்று.
875
தனக்குதவும் துணையோ இல்லை. பகையே இரண்டு. இந் நிலையில் இருக்கும் ஒருவன் அப்பகை இரண்டனுள் பொருந்திய தொன்றைத்தனக்கு இனிய துணையாகச் செய்து கொள்க.
தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். 876
பகைவனை முன்பு ஆராய்ந்து தெளிந்தானையினும் தெளியானா யினும், வேறொரு வினையால் தனக்குத் தாழ்வு வந்தபோது அவனைக் கூடாமலும் நீங்காமலும் நடுநிலையில் விட்டு வைக்க வேண்டும்.
நோவற்க நொந்த தறியார்க்கு மேவற்க
மென்மை பகைவ ரகத்து. 877
தான் வருத்தமுற்றதை அறியாத நண்பர்க்குத் தன் வருத்தத்தைச் சொல்லற்க. வலியின்மை பார்த்திருக்கும் பகைவரிடம் தனது வலியின்மையைக் காட்டாதிருக்க.
வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. 878
ஒருவன் தான் போர் செய்தற்குரிய வகையை அறிந்து, அது முடித்தற் கேற்பத் தன்னைப் பெருக்கி, மறதி புகாமல் தன்னைக் காக்கவே, அவனது பகைவரிடம் உண்டான களிப்புக் கெடும்.
இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த விடத்து. 879
முள்ளையுடைய செடியை இளம் பருவத்திலேயே பிடுங்கி யயறிக. முற்றிய போது தன்னைப் பிடுங்குவோர் கையை வருத்தும்.
உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். 880
தம்மொடு பகைப்பவரது செருக்கினை அடக்க முடியுமாயிருந்தும் அடங்காதவர், பின் மூச்சுவிடும் அளவிற்கும் உயிருடன் இருப்பவ ரல்லர். விரைவில் அழிவர் என்பது பொருள்.
No comments:
Post a Comment